மனிதனின் வாழ்க்கையில் சமூகத்தோடு ஒன்றிணைக்கக் கூடிய கட்டமைப்பிலும், மனிதனின் ஆற்றல், சரீர வளர்ச்சியிலும் பாடசாலையும் பங்கு வகிக்கின்றது. ஆனாலும், பிள்ளைகள் சக மனிதரோடு பழகும் நிலை வரும்போது, இவ்வாறான ஒரு சமூகத்திற்க்குள் பிள்ளைகளைப் பெற்றோர் அரசின் அல்லது சமூகத்தில் குடும்பத்தின் நிலை எனும் நிர்ப்பந்தங்களினால் பிள்ளைகளைப் பாடசாலைக்கு உட்புகுத்துகின்றனர். பிள்ளைகள் தமது எதிர்கால வாழ்க்கை தமக்கும், மற்றவர்களுக்கும் உதவியாக அமையும் எனப் பெற்றோர்கள் தமது அனுபவத்தினால், அவர்களின் கற்றல் நிலையிலும், குடும்பம் சமுதாயத்தில் உள்ள நிலையிலும் சிலர் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுமதிக்க விரும்புகின்றனர். இருப்பினும் இலங்கை நாட்டில் பாடசாலை கல்வி கட்டாயப்படுத்தப்பட்ட விடையமாயினும் அரசின் கட்டாயப்படுத்தப்பட்ட கல்வி பெரும்பாலும் எதிர்கால பயனுறுதியற்றதாகவே காணப்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் பாடசாலை நிர்வாகம், எதிர்கால பயனுறுதியற்ற கல்வி, நாட்டின் பொருளாதார நெருக்கடி, பாடசாலை சமூகம் சீர்நிலையற்ற காரணங்களினால் பாடசாலை இடைவிலகல் என்பது சாதாரண விடையமாகக் காணப்படுகின்றது. இவை 2022 ஆம் ஆண்டின் பிற்பாடே மிக அதிகாமாக தரவுகள் காட்டுகின்றன.
பொருளாதார நெருக்கடி
பாடசாலை இடைவிலகலுக்கு முக்கிய காரணம் பொருளாதார நெருக்கடியே அதிகமாக காணப்படுகின்றது. இவை எம் நாட்டில் எம்மால் ஏற்ப்படுத்தப்பட்ட தகுதியற்ற தலைவர்களே இவ்வாறான பொருளாதார நெருக்கடிக்கும் காரணமாக உள்ளனர். கட்டாயப்படுத்தப்பட்ட கல்விக்கு எவ்வாறாகிலும் தேவையான உதவிகள் சரியான விதங்களில் கிடைக்கப்பெறாமையினால், தமது குடும்ப வருமானத்தை நம்பினாலும் அது நாட்டின் பொருளாதார நெருக்கடியின் மாற்றங்களினால் அவை போதுமானதாக அமையாததும் இவ்வாறான இடைவிலகல்களிற்கு அதிக காரணமாகக் காணப்படுகின்றது. கட்டாயப்படுத்தப்பட்ட இக்கல்விக்குப் பாடசாலை செலவாக வருடத்திற்கு அதாவது, நடுத்தர வருமானத்தை உடையவர்கள் தமது மாத வருமானத்தில் 30 வீதத்திர்ககும் அதிகமாகச் சீருடை, காலணி, புத்தக பை, குறிப்பு புத்தகங்கள், போசாக்கான உணவு, தரமான கல்வி கொடுக்கப்படாமையினால் மேலதிக வகுப்புக்கள், போக்குவரத்து எனப் பல காரணங்களுக்காகச் செலவு செய்யப்படவேண்டி உள்ளது. இதனால் குறிப்பிட்ட தரத்திற்க்மேலாக தமது கல்வியினை தொடர முடியாமல் அரசின் பார்வைக்கு விலகி பாடசாலைகளை விட்டு வெளியேறுகின்றனர் அல்லது பாடசாலைக்குத் தொடர்ந்து சமூகம் கொடுப்பதை தவிர்கின்றனர். ஆனாலும், கட்டாய கல்வியினால் நன்மையடையும் சிலரினால் எவ்விதத்திலும் மற்றவர்களுக்கு நன்மையாகவோ அல்லது கற்றலை ஆர்வமாக்கக்கூடிய நிலை காணப்பட வில்லை என்பதும் நிதர்சனம்
இதன் விளைவாக கட்டாயப்படுத்தப்பட்ட பயனுறுதியற்ற கல்வியினால் பிள்ளைகளுக்கோ, அவர்களின் எதிர்கால நன்மைக்கோ, நாட்டுக்கோ எவ்விதத்திலும் பயனற்றதாகவே காணப்படுகின்றது. பாடசாலைகளுக்காகச் செலவு செய்யப்பட்ட நேரமோ அல்லது சொத்துக்களோ வீணாக்கப்படுகின்றன. இவற்றினால் கல்வியினை சரியான விதத்தில் கொடுக்கப்படவேண்டும் என விரும்பும் பெற்றோர்களால் கூட தமது பிள்ளைகளைக் கற்பிக்கமுடியாமல் உள்ளனர். ஆயினும் பெற்றோர் தமது முயற்சிகளினால் எவ்விதத்திலும் மீட்க முடியாத சொத்து இழப்புக்கள் அல்லது அதிக கடன் உடையவராகவே காணப்படுகின்றனர்.
மற்றும், சில பாடசாலைகளின் ஆசிரியர்கள் தமது தேட்டத்தை அதிகமாக்கும் நோக்கில் தமது பாடசாலையில் கல்வியினை சரியான விதத்தில் கற்றுக்கொடுக்காமல், அவர்களின் தனிப்பட்ட கல்வி நிலையங்களுக்கு சமூகம் தராதவர்களின் பரீட்சைகளுக்கான புள்ளிகளைக் குறைத்தல் போன்ற செயற்பாடுகளும் அதிகமாகக் காணப்படுகின்றது. பாடசாலை வகுப்பினுள் எல்லா மாணவர்களுக்கும் சம அந்தஸ்து கொடுக்கப்படாமை, மற்றும் ஆசிரியர்களினால் ஒழுக்கமற்ற, ஆரோக்கியமற்ற செயற்பாட்டினை துணிந்து மாணவர்கள் மீது வலிந்து செய்யக்கூடிய நிலை, மாணவர்களின் சமூகத்தின் ஒழுக்கமற்ற செயற்பாட்டினை கண்டிக்காமை மற்றும் ஆதரவு கொடுப்பதின் காரணங்களால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்திற்குக் காரணங்களை மறைத்து பாடசாலை இடைவிலகல் செய்கின்றனர்.
கட்டாயப்படுத்தப்பட்ட கல்வியினை பயனுறுதியாக கல்வியினை கற்று முடிக்கும் வரை அதற்குரிய தேவைகளைக் கட்டாயப்படுத்தினவர்களே பொறுப்பேற்க வேண்டும் அல்லவா, பாடசாலைக்கான அரச சட்டங்களின் அதிக நன்மைகளைப் பெற அவற்றினை சரியான விதத்தில் கடைப்பிடிக்க சம்மந்தப்பட்ட அமைச்சுகள் உரிய சட்டங்களைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். அல்லது கட்டாயப்படுத்தலை விட்டுவிட்டு பெற்றேரின் பாதுகாப்பில் தமது பிள்ளைகளின் கல்வியினை அரச நிபந்தனைக்கு (எவ்வகையான கல்வி நிலையங்களாயினும், கட்டண நிபந்தனைகளைச் சரியாகக் கடைப்பிடிக்கப்பட, பிள்ளைகளின் பாதுகாப்பினை உறுதி செய்தலும்) உட்பட்டு கற்றலை தொடர அனுமதி கொடுக்கப்பட வேண்டும்.