ஒரு நாடு பொருளாதார ஆதரவின்றி அதிகப் பணத்தை அதிகமாக அச்சிடுவதால், அது பல தீங்கு விளைவிக்கும் எனவும் மற்றும் பொருளாதார விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பது பலரும் அறிந்ததே. அதாவது பொருட்கள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களின் விலையேற்றங்கள் ஏற்படும். அதிகமாக, வருமானம் குறைந்தோரை வெகுவாய் பாதிக்கும், அதிக வருமானம் பெறுவோரின் தமது பணத்தினை நிலையான சொத்துக்களாக மற்றுவதற்க்கு முனைவார்கள், வருமானமுள்ளோர் தமது உள்நாட்டுக் கடன்களைச் செலுத்துவது இலகுவாகும் வெளிநாட்டுக் கடன் செலுத்தப்படுவது கடினமாகும். புதிதாகக் கடன் வாங்குபவர்களுக்குக் கடன் வாங்குவது கடினமாகும்.
ஆனால், பாதுகாப்பாக நாட்டின் பணத்தினை அதிகமாக அளிப்பதால் தற்காலத்தில் கணிசமான அளவு பொருளாதார வளர்ச்சியைப் பாதித்தாலும் நாட்டில் குறுகிய காலத்தில் நாட்டில் மதிப்பும் அதிகரிக்கப்படும் மற்றும் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலையும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் வெகுவாக குறைவடையும், நாட்டின் வாழும் எவ் தரப்பிலும் உள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பின்றி நிம்மதியாக வாழ வழிவகுக்கும் ஆனால் இவ்வாறான காரியத்தை பெரும் முதலீட்டாளர்கள் (வங்கி, காப்புறுதி நிறுவனங்கள், பெருமளவில் இறக்குமதி ஏற்றுமதி செய்வோர், அட்சியில் இருக்கும்போது பணங்களை கௌளiயிட்டவர்கள் தற்போது கொள்ளையிடுபவர்களும், தரகர்கள், போதைப்பொருட்கள் வியாபாரிகள், கடன் கொடுக்கும் வணிகங்கள் இன்னும் பல) எவ்வகையிலும் அனுமதிக்க விரும்பாமல் ஆட்சி மாற்றங்களைக் கூட செய்வதற்கு பெரும் முயற்சி எடுப்பார்கள் மற்றும் ஆட்சியாளர்கள் பெரும் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும், இல்லாவிடினும் ஆட்சியாளர்கள் கூட அதிகமாக இவ்வகையான ஒன்றைச் செய்ய முயற்சி செய்யமாட்டார்கள் காரணம் தற்காலத்தில் ஏற்படும் பதிப்பை எதிர்கால நோக்கம் இல்லாம் தற்பொழுது எவ்வாறு சரிசெய்வது என்று அறியாமல். ஏவ்வகையாயினும் அவர்கள் இழப்புக்களை நேரிட்டாலும் நாட்டின் அனேகமான அதாவது 90% க்கும் அதிகமான நாட்டு மக்களுக்கு நன்மையாகவே காணப்படும் மற்றும் நாட்டின் பணப்பெறுமதி அதிகரிக்கும். மக்களின் எதிர்காலம் நன்றாக அமையுமாயின் அவர்களின் இழப்புகளுக்கு நாட்டு மக்களும் பொறுப்பேற்றால் அவ் பாதிப்பும் குறைக்கப்படலாம்.
மற்றும் நாட்டில் உள்ள பெறுமதி கூடிய பண தாள்களின் பாவனையை நிறுத்தினாலும் தமது நாட்டின் பொருளாதாரத்தை மேலும் உயர்த்த முடியும், போதைப்பொருள் கடத்தல்கள் குறைக்கப்படும், கறுப்புப்பண புழக்கம் குறைக்கப்படும். மற்றும் வங்கி வட்டியின் அளவுகளைக்குறைத்தால் பணம் அதிகளவு முதலீடு செய்யப்பட்டு பணப்புழக்கம் அதிகமாவதோடு; வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கப்படும்.
அத்தோடு நாட்டு மக்களின் தேவைகளை முதலாவது நிறைவேற்றி, (விலைக்கட்டுப்பாட்டில் கவனம் செலுத்தி) அதிகமாக ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களின் உற்ப்பத்திப்பொருட்க்களுக்கு தேவையான உபகரணங்களுக்கானதும், நாட்டின் அத்தியாவசிய பொருட்களின் வரியினை ரத்து செய்து நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்யக்கூடிய நிலைகளை ஏற்படுத்தினாலும் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்குத் தேவையான பொருட்களை கௌவனவு செய்ய முடியும், உள்ளூர் உற்பத்தியினை அதிகரிக்கவும், அதிக செலவினங்கள் செய்யப்படவேண்டியதால் கைவிடப்பட்ட நிலங்கள் அல்லது பாவனைக்கு உகந்ததாகிலும் அரசினால் தடுக்கப்பட்ட நிலங்களையும் மற்றும் கடல் வளங்களைப் சுதந்திரமாக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டாலும் அதி வேலைவாய்ப்பினை அதிகரிக்கவும் முடியும். வெளிநாட்டு முதலீட்டாளர்களிடத்திலும் நன்மதிப்பு பெற்றுக்கொள்ள முடியும்.
மற்றும் அதிகப் பணம் பெறும் நோக்கில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் தரகர்கள், இடைத்தரகர்கள் செயற்பாட்டிற்கும் விலை நிர்ணய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.
எவ்வாறாகினாலும் ஆட்சி நினைத்தால் மட்டுமே நாட்டு மக்கள் எதிர்காலம் நன்றாக அமையும்.