புனர்வாழ்வழிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பன் அவர்கள் மன்னாரில் 28/09/204 அன்று நடைபெற்ற நடைபெற்ற "ஊடக சந்திப்பில்" கூறப்பட்டவை தமிழரின் இயலாமையைக் காண்பிக்கின்றது.
நாம், "அன்பார்ந்த தமிழீழ மக்களே" அல்ல, தற்பொழுது நாம் "ஈழ மக்கள்" என அறியப்படுகின்றோம்.
உங்களையும் நாம் நம்பமாட்டோம் என அறிந்ததால் காலினை பிடிக்கின்றீர்கள் எனவும் சிந்திக்க வைக்கின்றது.
காணாமற்போனவர்கள் என சொல்லப்படுவது தவறானது, காணாமல் ஆக்கப்பட்டோர் என கூறப்பட வேண்டும்,
புலம்பேர்ந்தோர் இவ்வாறான காரியத்தை விரும்புவார்களோ, தற்பொழுது இலங்கையில் காணப்படும் தமிழ் கட்சிகளில் இருக்கும் உறுப்பினர்களைப்போல தமது வயிற்றை மட்டும் நிரப்ப முயற்சிசெய்பவர்களின் (முறை மட்டுமே வேறு) பேச்சுக்கள் அநாவசியமற்றதே, தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரில் வாழ்பவர்களே அன்றி தமிழீழ விடுதலைப்புலிகளுக்காகவோ, தனித் தமிழீழத்திற்க்காக அல்லது எதிர்கால நோக்கமற்றவர்களாக வாழ்பவர்கள், நாடு கடந்து தமிழீழத்திடம் இலங்கையின் தமிழர்களின் பிரச்சினையே தீர்ப்பதற்காகப் பணம் இருந்தாலும் அவர்களின் ஒற்றுமையின்மையும் தமது பைகளை நிரப்ப முயல்வதுமே மிக அதிகமாகக் காணப்படுகின்றது, தீர்வுக்காகப் பயன்படுத்த மறுப்பவர்களும் விரும்பாதவர்களுமே.
புனர்வாழ்வளிக்கப்பட்டது என்பது இலங்கை அரசினால் போடப்பட உயிர்ப்பிச்சை, புனர்வாழ்வளிக்கப்பட்டது இவ்வாறான போராட்டங்களைச் செய்யாமல் உங்கள் உழைப்பில் கவனம் செலுத்தவே தவிர மாவீரரின் பெயரினை பயன்படுத்தி போராட்டத்தை புதிய முறையில் செய்வதற்கல்ல, அவ்வாறாயின் உங்கள் போராட்ட முறை மாற்றப்பட்டதே அன்றி போராட்டம் மாறவில்லை என்பதே, புனர்வாழ்வு தந்தவர்களுக்கு எதிராக மீண்டும் வேறு முறையில் எதிர்ப்பதாகும்.
விடுதலைப்புலிகளின் ஆட்சியிலிருந்த யார் தற்ப்பொழுதும் அவர்களின் அறநெறி சட்டங்களை இன்றுவரை சுயமாகவே கடைப்பிடிக்கின்றார்கள், இது அவர்களின் காலத்திலும், தற்க்காலத்திலிலும் உள்ள தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படாததும் அல்லது சட்டத்திற்கு உட்பட விருப்பமற்றவர்களாகக் காணப்படுகின்றது. இவற்றினை அறிந்தும் இவ்வாறான சூழ்நிலையில் ஏன் நீங்கள் குரல் கொடுக்க முனைகின்றீர்கள், உங்கள் இலாபத்திற்காகவே, எவ்வளவேனும் யோசனையற்று வேறு இனம் எம்மை ஆளுவதற்கு அவர்களுக்கும் வாக்குகளை அளித்தவர்களும் இவ் ஒற்றுமையற்ற தமிழரே, இப்படிப்பட்டவர்களுக்காகவே நீங்களும் அங்கவீனமாக்கப்பட்டீர்கள் என்பதையும் சிந்தியுங்கள், மாற்றம் வேண்டுமானால் முன்பதாக தமிழ் இனத்து மக்களே தாமாக மற்றதைக் காண்பிக்கவேண்டும், அதுவே அவசியமானதும் தற்சமயத்தில் போதுமானதுமாகும்.
உங்களது வருமானம் எறத்தாழ ரூபாய் 50,000.00 இனை எவ்வாறு உங்கள் வாழ்க்கை செலவிற்கு போதுமானது எனக் கூற முடியுமா, இல்லாவிடின் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே.
உங்களுடைய கொள்கைகளையும் செயப்பட்டிற்க்கான நம்பிக்கைகளையும் தெளிவாக தொரியப்படுத்தபடுமிடத்து நீங்கள் வீடு தேடிவரவேண்டிய அவசியம் காணப்படாது, உங்கள் பேச்சுகளே நம்பிக்கையற்ற தன்மைய காண்பிக்கின்றது,
புதிய கட்சி ஆரம்பிக்கப்படுவது என்றால் ஆரம்பத்தில் உள்ள தமிழ்க் கட்சிகளில் எவ்விதத்திலும் பயனற்றவர்களும், அவர்களை நம்ப அவசியம் இல்லை என்பதையும், ஊழல்கள் செய்பவர்கள் என்றும் நேரடியாகவே காண்பிக்கப்படுகின்ற விடையமாகும்.
திரைப்பட யோசனை யோசனை போலும் எல்லா மட்டங்களிலும் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் உங்கள் கட்சியின் யோசனை, வடக்கு கிழக்கு மக்களாக ஒரு கட்சிக்காக (பை நிறைப்பதற்காக) எவ்வாறு ஒற்றுமையானீர்கள், பதவிக்காகவே.
மாவீரர் என அழைக்கப்படுகின்றவர்களின் இலட்சியம் இது அல்ல, அவர்களுக்கு வேண்டிய பதிலும் இது அல்ல, அவர்களைப்போலவே நாட்டுக்காகப் போராடவேண்டியது அல்லவோ அவர்களின் இலட்சியம், ஊழல் அற்ற சமூகம் மட்டுமல்ல அல்ல அவர்களின் போராட்டம், தனி ஆட்சிக்கானதும் தனி நாட்டுக்கானதுமே. மாவீரகளின் பெயரினை பயன்படுத்த எவ்வளவேனும் தகுதியற்றவர்களே தற்சமயத்தில் காணப்படும் இலங்கைத் தமிழர்கள்.