வருமான வரி என்பது ஒரு தனி நபரோ அல்லது ஒரு நிறுவனமோ தனது சொந்த முயற்ச்சியிலும் திறமையிலும் ஈட்டும் வருமானத்தில், தன் நாட்டின் நன்மைக்காகவே வரி அறவிடப்படுகின்றது எனும் விம்பத்தினை மக்களுக்குக் காண்பித்து, மற்றும் சில அநாவசியமான சேவைகளை வழங்கி, இவற்றிற்குப் பக்கச் சார்பாகக் கருத்து தெரிவிப்பதற்கு சில அரச அடிமைகளையும் வைத்து, வருமானமீட்டுபர்களிடம் அனாவசியமாக வசூலிக்கப்படும் பணத்திற்குச் சொல்லப்படும் அளவீட்டின் பெயரே வருமான வரி. இவ்வாறான வரியினால் ஏற்படும் பாதிப்புக்கள் மறைக்கப்படுவதற்க்காக அதாவது வரிச்சுமை பாதிப்புக்களை காண்பிப்பதற்கு வளர்விகித வரி, தேய்வுவிகித வரி (Progressive tax) எனும் மாற்றங்களும் காட்டப்படுகின்றன. இவ்வாறான அரசின் அநாவசியமான செயற்பாட்டால் அதிகமாக பணப்பதுக்கல்கள் அல்லது வருமானங்களை அரசிற்குத் தெரியப்படுத்தாமல் மறைகப்பதற்க்காகவே அதிகமானோரால் முயற்சிகள் செய்யப்படுகின்றது, அதாவது கட்டாயத்தின் பெயரிலும் வரி விடையத்திலும் அரசின் அடக்கு முறையினாலே இவ்வாறான வரி செலுத்தல் உழைப்பவர்களினால் செய்யப்படுகின்றதே தவிர, நாட்டு மக்கள் இதனை விரும்பி செய்யவில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது.
இதனால் தமது சொந்த நிலங்களை இழக்கவேண்டிய நிலைகளும், சொந்த நிலங்களால் எவ்வித்திலும் நன்மைகளை பொற்றக்கொள் முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதே தவிர வேறு எவ்விதத்திலும் சுய முயற்சியினால் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவுமில்லை, மற்றும் ஒரு சமூக முன்னேற்றமும் ஏற்படவுமில்லை, சமூகம் ஒன்றிப்பை போக்கடித்து பணம் இருந்தால் போதும் என்று எண்ணும் நிலையே உருவாக்கி உள்ளது. ஆனாலும் அதிக வருமானத்தைப் பெறவே அரசுகள் முயற்சி செய்கின்றனரே தவிர ஒவ்வொருவரின் உழைப்பும் சரியான விதங்களில் மற்றவர்களுக்குப் பிரயோசனமாக உள்ளதா, சரியான விதங்களில் பெறுமதியாக்கப்பட்ட விலைகளில் உற்பத்திப்பொருட்களின் சந்தைப்படுத்தப்படுகின்றதா என நோக்குவதை விட்டு விட்டு, தமக்கு வருமான வரி அதிகமாகினால் போதும் எனத் துர நோக்குடன் விற்பனை வரியைக்கூட விட்டுவைக்காமல் எப்படியாவது பெற்றுக்கொள்ளவே செயற்பட்டுக்கொண்டிருக்கும் அரசாட்சியை யாரும் விரும்பவில்லை.
உழைப்பாளிகளால் செய்யமுடியாத எந்த நன்மைகளை அரசு உழைப்பாளிகளின் வரிப்பணத்தினால் செய்ய முயற்சி செய்கின்றனர்,
வீதியை உபயோகப்படுத்த வீதிக்குப் பணம் செலுத்தி அவ் பணத்தினால் வீதியை புரணமைத்து அதிலே பயணிக்க முடியும், பிள்ளைகளின் திறமையை அவர்களின் சமுதாயத்திலோ, நாட்டிற்கோ பிரியோசனப்படுத்தும் விதங்களில் பெற்றோரினால் ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய கல்வி. அதிகமாகத் தொழிற்கல்விகள் கட்டணம் செலுத்தப்பட்டே கற்றுக்கொள்ள வேண்டி உள்ளது, மருத்துவத்திற்காக அநாவசியமாகச் செய்யப்படும் அல்லது பெற்றுக்கொள்ளப்படும் செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டால் அரச உதவி தேவையற்றதே. அரசிற்கு வரிப்பணம் செலுத்தினால்தான் இவ்வாறான பெறுமதி மிக்க செலவுகள் குறைக்கப்படும் என மூடத்தனமாக நம்பவைப்பதை விட்டு விட்டு, கட்டணக்கட்டுப்பாடுகளை சட்டத்தினால் சரிசெய்யப்பட்டால் ஒவ்வொருவரும் தமது முயற்சியில் தமது வாழ்க்கைத்தரத்தை உயர்த்த தமது உழைப்பினால் முயற்சி செய்பவர்களுக்கு எவ்வித பங்கமும் ஏற்படாதபடி சட்டங்கள் அமைப்பதை விட்டு விட்டு தமது இலாபத்தை எதிர்பார்ப்பதே அரசின் வரி அறவிடும் சட்டம்.
தங்களுக்குக் கொடுக்கப்பட்ட நில எல்லைகளை விட்டு வேறு நிலத்தின் விளைவுகளையும், நன்மைகளையும் எடுத்துக்கொண்டிருக்கும் அரச ஆட்சிகளும், ஆட்சியாளர்களும் இவற்றிற்குக் காரணமாக அமைகின்றது. ஆனாலும் எமது நிலத்தினை எல்லைகளை நாம் பாதுகாக்க நாம் எவ்வித்திலும் முயற்சி செய்ய விடுதில்லை, அவ்வாறாயின் வரி பெற்றுக்கொள்ளக் காரணங்கள் அற்றுப்போய் விடும். வாழ்த்து சாவதற்கு ஓர் நிலம் இருந்தால் போதும் என நினைக்கும் நிலையே தற்பொழுது உண்டு. எத்துறையில் உள்ளவராயினும் ஒவ்வொருவரிற்கும் நில மற்றும் கடல் எல்லைகள் உண்டு. அவ்வாறே தமது எல்லைகளில் கற்றுக்கொடுக்க, வைத்தியத்திற்கு, விவசாயத்திற்கு, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு, இன்னும் அதிகமான திறமைகளைப் பயன்படுத்துவதற்கு நில மற்றும் கடல் எல்லைகள் உண்டு, ஆனாலும் அவற்றைக் கூட அரசு தாங்கள் உருவாக்கிய நிலம் மற்றும் கடல் எல்லைகள் என நினைத்து அநாவசிய காரணங்களையும் பொய்யான பரப்புரைகளையும் காண்பித்து மக்களால் பயன்படுத்த விடாது நிலத்தையும், கடல் எல்லைகளையும் தக்கவைத்துக்கொள்கின்றது, பயன்படுத்துபவர்களுக்கு வரியையும் அறவிடுகின்றது. காரணம் தமது உழைப்பு அற்றுப்போய்விடுவதாக அஞ்சுகின்றனர்.
நாட்டின் பாதுகாப்பு நிலை பற்றிய அறிவை நாட்டு மக்களுக்குக் கொடுப்பதும், செயற்படுத்த வைப்பதும், மக்களின் நன்மைக்கான அரச சட்டங்களைத் தக்கவைத்து அவைகள் சரியான விதங்களில் நிறைவேற்றப்படுகின்றதா எனக் கண்காணிப்பது அரசிற்கு போதுமானது தவிர மக்களின் உழைப்பை அரசின் செலவிற்காக எதிர்பார்த்துக்கொண்டிருப்பதில்லை.