தமிழக மீனவர்கள் இலங்கையின் இந்தியக் கடல் எல்லைக்கோட்டை தாண்டினால், அவர்கள் கைது செய்யப்படுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் இலங்கை அரசு அவர்களுக்கு மொட்டையடித்தலும் மற்றும் அதிக அபராதங்களை விதிப்பதை ஏற்க முடியாது எனவும், இந்தியாவில் உள்ள இலங்கை தூதரை அழைத்து இந்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனவும் மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.
பொதுவாகத் தமது கட்சியின் பெயர்களை மக்களுக்கு ஞாபகப்படுத்தும் வண்ணம் இவ்வாறான கருத்துக்கள் தெரிவிப்பதில் அரசியலில் உள்ளவர்கள் அதிகமாகவே காணப்படுகின்றனர் என்பது தெரிந்த விடையமே, ஆனாலும் கருத்துக்கள் எவ்வாறாயினும் பயனுள்ளதா, சரியானதா எனக் கவனிப்பதில்லை அல்லது தவறினை திருத்த முயற்ச்சிப்பதும் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது.
இருப்பினும் மனிதாபிமானம் அற்ற முறையில் அயல்நாட்டின் சொத்துக்களை நியாயமற்ற முறையில் கொள்ளையிடுபவர்களுக்கு எவ்விதத்திலும் பயனுள்ள விதங்களில் தடைகளையோ, தண்டனைகளை நியாயமான முறைகளில் கொடுப்பதை தவிர்த்து, அல்லது தமது நாட்டுக்குடிகள் அயல்நாட்டின் செத்துக்களை சேதப்படுத்தி இவ்வாறான கொள்ளைகளைச் செய்பவர்களும் உண்டு என்பதில் எவ்வித கவனிப்பும் வெட்கமும் இன்றி, பாதிக்கப்பட்டவர்களினால் கொடுக்கப்பட்ட சிறிய அளவிலான தண்டனைகள் விவகாரத்தில் மனிதாபிமானமின்றி மக்களிடையேயும், இரு நாட்டின் உறவுகளுக்கிடையே அனாவசியமான குழப்பங்களை ஏற்படுத்தும் இவ்வாறான பேச்சுக்களே மனிதாபிமானமற்றதாக காணப்படுகின்றது.
தம் நாட்டின் கடல் சொத்துக்களை கொள்ளையிடப் பயன்படுத்திய அனைத்து உபகரணங்களையும் இலங்கை அரசினால் பறிமுதல் செய்யப்பட்டு மற்றும் அவர்களால் அழிக்கப்பட்ட இலங்கையின் கடல் சொத்துக்களுக்குரிய பெறுமதியையும் அவர்களிடத்தில் இருந்தும், இதை அனுமதித்தவர்களிடமும் இருந்தும், இவ்வாறு பொறுப்பற்று கருத்துக்கள் தெரிப்பவர்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ள வேண்டியது மிக அவசியமானதே. அல்லது பெற்றுத்தரவேண்டியது அவர்களின் பொறுப்பே. இவ்விடையத்தில் அதற்கான செயற்பாடுகளும் அதனை நிறைவேற்றலுமே மனிதாபிமானம்.
இவ்வாறு செய்பவர்களுக்கான தண்டனைகளை இலங்கை அரசு தவிர்த்தால் அல்லது அழிக்கப்பட்ட சொத்துக்கள் மீட்க்கப்படாவிடின் அந்நாட்டின் கடல் சொத்துக்களை அவ் நாட்டவரே அழிப்பது என்றாகிவிடும். மற்றும் சிலரை அடையாளப்படுத்த பாரதூரமற்றதும் அவசியமானதுமான அடையாளங்களை ஏற்படுத்துவது எவ்வளவேனும் தவறற்றது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
இவ்வாறான கொள்ளைகளைச் செய்தவர்களையும், துணைபுரிந்தவர்களையும் அழைத்து கண்டமும் தெரிவிப்பதைக் கருத்தில் கொள்ளாமல் பாதிக்கப்பட நாட்டின் தூதுவரை அழைப்பதும் கண்டனம் தெரிவிப்பதும் பயனற்றதே.