"சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளாக அனைத்து பாடசாலைகளையும் மாற்றி தகவல் தொழில்நுட்பம், கணினி விஞ்ஞானம், நவீன தொழில்நுட்பம், மற்றும் ஆங்கில மொழிக் கல்வி என்பனவற்றைப் பயில்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி, புதிய கல்வி முறை ஒன்றின் ஊடாக சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம். சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலைகளாக அனைத்து வைத்தியசாலைகளையும் மாற்றி உயர்தரத்திலான அனைத்து வசதிகளையும் கொண்ட வைத்தியசாலை கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவோம்." எனும் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் ஒரு போதும் நன்மதிப்பினை பெறப்போவதில்லை எனத் தெரிந்தும் எதற்காக இவ்வாறான வாக்குறுதிகளை வேட்பாளர்களால் தெரிவிக்கப்படுகின்றதும் என்பது அதற்குப் பக்கச் சார்பாகக் கூட்டுச் சேருபவர்கள் இருப்பதால் எமது நாட்டின எதிர்காலம் கேள்விக்குறியாகவே இன்னமும் காணப்படுகின்றதே தவிர எவ்வித நம்பிக்கையோ எமக்குக் கொடுக்கப்போவதில்லை.
எமது நாட்டில் வாழும் ஒவ்வொருவருக்கும் அவர்களின் அடிப்படைத் தேவைகளைச் சரியான விதங்களில் கிடைக்கப்பெற ஏற்ற வழிகளை அறிந்து அவற்றுக்கான காரணிகளைச் செய்வதற்கு ஏற்ப திட்டங்களை ஆலோசிக்காமல் அனாவசியமற்ற செயற்பாட்டிற்கு இவ்வாறான வாக்குறுதிகளைக் கொடுப்பது அவற்றை நிறைவேற்றாமல் அல்லது சில வீதங்களே நிறைவேற்றுவதும் நாட்டு மக்களுக்கு மிகவும் கவலைக்கிடமான விடையமே, மக்களின் வாக்குகள் வாக்குறுதியை நம்பியல்ல என்பதைப் புரிந்து கொண்டால் நல்லது.
எமது அன்றாட தேவைகள் முதலாவது கிடைக்கப்பெற வேண்டும் அல்லவா, எதிர்காலத்தில் மக்கள் நாட்டில் வாழக்கூடிய நிலையே சந்தேகத்திற்கிடமாக காணப்படுகின்ற இவ்வாறான சூழ்நிலையிலும், நாட்டின் கடன்கள் முழுவதும் சரியான விதத்தில் செலுத்தி முடிக்கப்படாத சூழ்நிலையிலும், ஆட்சிக்காலத்திலே நிறைவேற்றி முடிக்க முடியாததுமான, அனாவசியமற்ற வாக்குறுதிகளும், ஆட்சியாளர்களும் எமக்கு தோவையற்றதே. நாட்டின் தேசிய பாதுகாப்பை சிறிதளவாகிலும் ஏற்றுக்கொள்ளவும் உறுதிப்படுத்தவும் இவ்வாறான தேர்தல்கள் பயனுள்ளதாக அமையுமே தவிர நாட்டின் ஒவ்வொரு குடிமக்களுக்கும் பயனற்றது. அவ்வாறே வைத்தியசாலைக்கான திட்டங்களும் அமைகின்றன. ஆதலால் இவை வெறும் ஏமாற்று வேலையே.
விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் பல சலுகைகள்.
ஆட்சியாளர்களின் உதவியில் எமது எதிர்காலத்தை நம்பி இல்லாது, இவற்றினை எமது சொந்த உழைப்பிலே வாங்க, விற்க ஏற்ற விலைப் பட்டியலுக்கான திட்டங்களைச் செயற்படுத்தினாலே போதுமானது, நிவாரணம் என்ற பெயரில் உங்கள் வாக்குகளை விற்பதை விட்டு விட்டு விவசாயிகளின் மற்றும் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யாது எமது நாட்டிலே நியாயமான விலைகளில் வாங்க விற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டால் பயனுள்ளதாகக் காணப்படும்.
வறுமை ஒழிக்கும் புதிய வேலைத்திட்டங்கள்
வறுமைக்கான காரணங்கள் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளும், சரியான விதங்களில் நிறைவேற்றி முடிக்காததும், எம்மை ஏமாற்றும் வாக்குறுதிகளினாலும், ஆட்சியாளரை நம்பி எமது எதிர்காலத்தைத் தீர்மானிப்பதே காரணமாகிவிடுகின்றது.
இவ்வாறான வாக்குறுதி 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 57ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் புரட்டாசி மாதம் 15 கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும் பாதிக்கப்படப்போகின்றவர்கள் நாமே.