2024 புரட்டாசி 15ம் திகதி மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருடனான விசேட கலந்துரையாடல் கலந்துரையாடலின் சாரம்சமாக அமைந்த "வாகரை இல்மனைட்(ilmenite) அகழ்வுடன் தொடர்புடைய காணி திருடர்கள், சட்ட விரோத மண் கடத்தல்காரர்கள் மட்டக்களப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதோடு இவ்வாறானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதும், மயிலத்தமடு மாதவனை கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் தமது மேய்ச்சலுக்காகத் தனியார் காணிகளை ஆக்கிரமிப்பு செய்தலும் இடம்பெற்றுள்ளதாகக் கொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான தீர்வும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறை தொடர்பான பிரச்சினைகள், ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான பிரதான சூத்திரதாரியினையும் அதனோடு தொடர்புடைய சகலரையும் கைது செய்து நீதியை நிலைநாட்டப்படுவதோடு, பிள்ளையான் போன்ற கொலையாளிகளையும் கைது செய்ய வேண்டும் (துணை ,ராணுவக் குழுத் தலைவர் பிள்ளையானின் ஆதரவாளராகவும் செயல்பட்டவர்)".எனும் விடையங்களும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் இவ்வாறான வாக்குறுதிகள் மக்கள் மனதிற்கு ஆறுதலை அளித்தாலும் இவற்றிற்கு இலங்கை சட்டத்தினால் அல்ல ஆட்சியாளர்களினால் மட்டுமே தீர்வு காணமுடியும் எனவும், தற்சமயத்திலே காணப்படும் ஆட்சியாளர்களாலே தீர்வு காணமுடியாமல் காணப்படுவது கேளிக்கையும் கேள்விக்குரிய விடையமாகவே காணப்படுகின்றம், அவர்களும் ஆதரவு எனக் காண்பிக்கப்படுகின்றதுமின்றி அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்படுகின்றதும் உங்கள் நேர்மையற்ற செயறிப்பாட்டினை காண்பிக்கின்றது, மற்றும் அவ்வாறானவர்களைத் தெரிந்து அடையாளம் காட்டப்படாமல் விட்டால் அவ் செயற்ப்பட்டிறகும் நீங்களும் பங்குதாரரே, மற்றும் சட்டத்தின் மூலம் தீர்வு காண முடியுமானால் இதுவரை அவற்றை தொரிப்படுத்தாமல்லும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதால் நீங்களும் அவற்றிற்கு உடந்தை என மக்களால் முடிவு செய்யப்படுமல்லவா. அல்லது இலங்கை சட்டம் இவ்விடையத்தில் எவ்வகையிலும் பயனற்றதாக காண்பிக்கப்படுகின்றது எனவும் தெரிய வருகின்றது. அவ்வாறு தீர்வு காணமுடியாத விடையங்களிற்கு மக்களுடைய நேரங்களை வீணடித்து அரசிற்கு எதிராகப் பல போராட்டங்களை சில விடையங்களுக்காக முன்னெடுக்கப்பட்டதும் அதில் கலந்து கொண்டது மக்களை ஏமாற்று காரியமே தவிர எவ்விதத்திலும் பயனற்றது என இவ் கலந்துரையாடல் காண்பிக்கின்றது.
இவ் கலந்துரையாடலின் உண்மைத்தன்மையை அறியக் கலந்துரையாடலின் தீர்மானம் எவ்வாறு சட்டத்தின் அடிப்படையிலும் உங்கள் ஆட்சி அதிகாரத்திலும் செயற்படுத்தப்படும் எனும் கோவையையும், ஒப்பந்த கைச்சாத்தினையும் மக்களுக்கு வெளிப்படுத்துவதே நம்பிக்கையாகக் காணப்படும். அவ்வாறு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் உங்கள் பதவி நிலைகளை நிறைவேற்றும் தகுதி கொண்டவர்களுக்குக் கொடுத்து மக்களை நிலையாக வாழ்வதற்கான ஏற்பாடுகளே செய்யப்பட வேண்டும். இவ்வாறான வாக்குறுதிகள் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளச் சொல்லப்படும் ஆனால் நிறைவேற்றப்படாததும், பல காரணங்களைக் கூறி செயற்படுத்தப்படாமல் போவதும் எமது வாழ்நாளில் அறிந்த விடையமே.
நாம் வசிக்கும் நிலத்தின் வளங்களை நாம் அனுபவிக்க முடியாதது மட்டுமல்ல பணத்திற்காகக் கொள்ளைகளைச் செய்ய உதவும் இவ்வாறான நாட்டுச்சட்டங்களும், ஆட்சியாளர்களும், பதவிக்காக மட்டும் இவ்வாறான வாக்குறுதி கொடுக்கும் வேட்பாளர்களாலும் தற்ச்சமயத்தில் வாழும் மக்களுக்கு மட்டுமல்ல எதிர்கால சந்ததியினருக்கும் நன்மையற்றது.